வவுனியா நெளுக்குளம் மகாவித்தியாலத்தில் குளவி கொட்டியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!!

617

Nelukulam Kalaimagal Maha Vidyalayam

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த நான்கு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் மு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் மூன்றுமாடிக் கட்டிடத்தில் காணப்பட்ட குழவிக்கூடு காற்றின் காரணமாக சிதைவடைந்துள்ளது.

இதனால் அதில் இருந்த குழவிகள் பறந்து பறந்து மாணவர்களை கொட்டியதால் ஐந்து மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் நான்கு மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனைய இருவரும் வீடு சென்றுவிட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.