வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பூச்சாடி விழுந்ததில் மாணவனுக்கு சத்திரசிகிச்சை!!

652

Mahavidlayam

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனது கையில் பூச்சாடி விழுந்ததில் அம் மாணவனுக்கு விரல்களில் காயமேற்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகாலநிதி மு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பாடசாலையில் இருந்த பூச்சாடி ஒன்று தரம் 7 இல் கல்வி கற்கும் எஸ்.விதுர்சிகன் (12) என்ற மாணவனின் கையில் விழுந்தமையால் மாணவனின் இரு விரல்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

விரல்களின் காயம் பலமாக இருந்தமையால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.