திருமண பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி திடீர் போராட்டம்!!

611

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாழை பகுதியில் வசித்து வருபவர் ஜோசி. இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கலைவாணனும் காதலித்து வந்தனர்.



இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெரியவர்கள் சம்மத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாழையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் திருமண சான்றிதழ் வேண்டி தட்டார்மடம் அருகே கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோசி, கலைவாணன் இருவரும் கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து, காதல் திருமண தம்பதியை அழைத்து சமாதானம் செய்தனர்.

 

சார்பதிவாளர் சுகத்திடம் அழைத்து சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சார்பதிவாளர் சுகம் உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.