முதல் இன்னிங்சில் 257 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை அணி!!

430

SL

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 257 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அவ்வளவு சோபிக்காத நிலையில் குமார் சங்கக்கார மட்டும் அரைச்சதம் கடந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து அணிக்கு வலுச் சேர்ந்தார்.

69.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை 257 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய லியாம் ப்ளங்கெட் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கட் இழப்பின்றி 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.