மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவத்தைச் சேர்ந்தவர் கைது!!

525

Abuse

மனவளர்ச்சி குன்றிய 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவ பொறியியலாளர் ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (20.06) அதிகாலை 1.30 மணியளவில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணதுறை, தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ பொருளியலாளராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் கம்பொல – நாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கடந்த 19ஆம் திகதி 4.30 மணியளவில் முந்தல், நவதன்குலம் – வீகேன்கட்டுவ வீதிப் பிரதேசத்தில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தயாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ சிப்பாய் ஒருவரது வீட்டு கட்டுமானப்பணிகள் காரணமாக குறித்த சந்தேகநபர் முந்தல் – நவதன்குளம் பிரதேசத்திற்குச் சென்று தங்கியிருந்த நிலையில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.