வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

931

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.



ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் திபுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.