நடிகர் விஜயை இணையத்தில் கலாய்க்கும் மக்கள்!!

502

VIjay

நடிகர் விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

விஜயின் கடிதத்தில், மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியினால் சினிமாத்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சினிமாத்துறை அழிவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதை படித்த பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

அதில் சிலர், பல கோடி சம்பளம் வாங்கும் விஜயிற்கே கேளிக்கை வரியினை ரத்து செய்தால், என் போன்று சில ஆயிரங்களையே சம்பளமாக வாங்கும் சாமான்யர்களுக்கு இந்த அரசாங்கம் வரியை உடனடியாக ரத்து செய்தாக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும், விஜயின் இந்த கடிதத்தினால் தலைவா படத்தினைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் கத்தி படத்தின் வெளியீட்டிலும், மறைமுகமான எதிர்ப்புகள் எழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் கருத்து பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.