அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படும் சம்பளத் தொகை தொடர்பான முக்கிய தகவல்!!

1664

இலங்கையில்..

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்துள்ளார்.பின்னர் இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.