வெற்றிகரமாக ஓடுவதால் பேய்ப் படங்களில் நடிக்க நடிகைகள் ஆர்வம்!!

503

Pei

தமிழில் வரும் பேய்ப் படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. இதனால் அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நயன்தாரா பேய்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெய்வீக சக்தி கொண்ட பெண் கரக்டரில் அவர் வருகிறார். இதில் அவருடன் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர்.

சுந்தர்.சி இயக்கும் அரண்மனை பேய்ப் படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் ஆண்ட்ரியா, ராய் லட்சுமி போன்றோரும் நடித்துள்ளனர்.

குழந்தைகளும் பெரியவர்களும் தொலைகாட்சிகளில் பேய்ப் படங்களை விரும்பி பார்க்கின்றனர். எனவேதான் பேய் கதையை படமாக்கி உள்ளேன் என்று சுந்தர்.சி. கூறினார்.

சமீபத்தில் வெளியான பேய்ப் படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்துள்ளன. ஏற்கனவே அனுஷ்கா நடித்த அருந்ததி படம் பலகோடி வசூல் குவித்தது. விஜய் சேதுபதி நடித்த பீட்சா படமும் வெற்றிகரமாக ஓடியது. லாரன்ஸ்– ராய் லட்சுமி ஜோடியாக நடித்த காஞ்சனா படம் ஹிட்டானது. இதையடுத்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முன்னணி நடிகர்கள் படங்களின் வசூலை இந்த படம் முறியடித்து உள்ளது. இதனால் மேலும் பல பேய் படங்கள் தயாராகி வருகின்றன.