இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை நோக்கி இலங்கை அணி!!

516

SL

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 457 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் 160 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 365 ஓட்டங்களையும் இலங்கை அணி 257 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன

இதன் படி வெற்றி இலக்கான 350 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நான்காம் நேர ஆட்ட முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக தம்மிக்க பிரசாத் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற 293 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 5 விக்கட்டுகள் கைவசம் உள்ளன.

இப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இங்கிலாந்தில் வரலாற்று வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

620-100 Final