இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்று முன்தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை ஆகும்.
நேற்று முன்தினம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 55 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தனது தொடர்ச்சியான 7 ஆவது அரைச் சதத்தினை பெற்றார்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை மேற்கிந்திய தீவுகளின் வீரர்களான எவர்டென் வீக்ஸ் (Everton Weekes), சந்திரபோல் (Shivnarine Chanderpaul ) சிம்பாவே அணியின் எண்டி பிளவர் (Andy Flower ) ஆகியோர் படைத்துள்ளனர்.
குமார் சங்கக்கார பெற்ற ஓட்ட விபரம்..
75 – பங்களாதேஷ் , டாக்கா – ஜனவரி 2014
319 – பங்களாதேஷ் , சிட்டகொங் பெப்ரவரி 2014
105 – பங்களாதேஷ், சிட்டகொங் பெப்ரவரி 2014
147 – இங்கிலாந்து , லோர்ட்ஸ் ஜூன் 2014
61 – இங்கிலாந்து , லோர்ட்ஸ் ஜூன் 2014
79 – இங்கிலாந்து , லீட்ஸ் ஜூன் 2014
55 – இங்கிலாந்து, லீட்ஸ் ஜூன் 2014






