இங்கிலாந்து செல்லும் இந்திய அணி பழைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா?

519

Ind

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பழைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா என் இந்திய இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட், 5 ஒரு நாள், ஒரு T20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 9ம் திகதி ஆரம்பமாகின்றது. ஆனால் இதற்கு முன் இரண்டு (மூன்று நாள்) பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

முதல் பயிற்சி வரும் 26ம் திகதி நடக்கிறது. இதற்கான டோனி தலைமையிலான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

இதில் நீண்ட நாட்களுக்குப்பின் கம்பீர், இளம் வீரர்களான ஈஷ்வர் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், சகா, பங்கஜ் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து தொடரில் 4-0 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

620-100 Final