வவுனியா நகரில் ஏழு கடைகளில் திருட்டு : பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக துணிகரம்!!

3069

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள 7 வியாபார நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றயதினம் இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வன்னிப் பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையங்களின் கதவுகளை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வியாபாரநிலைய உரிமையாளர்கள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சீசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் 50ஆயிரம் ரூபாய் வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது