இலங்கை கல்வி முறையில் மாற்றம் : 17 வயதில் உயர்தரப் பரீட்சை : கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

831

இலங்கையில்..

10 ஆம் தரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



இதேவேளை, ஒரு மாணவர் 17 வயதில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 4 வயதைப் பூர்த்தி செய்த ஒரு குழந்தை நிச்சயமாக முன்பள்ளிக் கல்வியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.