வவுனியாவில் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக் கோரிய பொலிஸார் : நீதிமன்றத்தால் மனு நிராகரிப்பு!!

1299

போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்று வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை நினைவுகூருவதற்கு இரு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

இதனால் குழப்பநிலை ஏற்ப்படும் வாய்ப்புக்கள் இருப்பதனால் குறித்த நினைவேந்தலுக்கு தடையினை விதிக்குமாறு ஈச்சங்குளம் பொலிசார் வவுனியா மாவட்ட நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர்



இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது தீர்பளித்த நீதிபதி உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எவருக்கும் உரிமையுள்ளது. எனவே அதற்கு தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்திருந்தார்.

அத்துடன் குறித்த விடயத்தில் கலகம் விளைவிப்பவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறும் பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.