மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்த மலேசிய விமானம் : புதுத் தகவல்!!

560

Flight

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பயணித்த மலேசிய விமானம், மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் புதுத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது. இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

ஆனால் அங்கு விழுந்தது ஏதும் விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் விமானம் மாயமான பிறகும் தொடர்ந்து மிகவும் கட்டுப்பாடான முறையில், பல மணி நேரம் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது எந்தவிதமான சேதமும் அடைந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது பறந்தபோது எரிபொருள் தீர்ந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சில புதிய பகுதிகளுக்கு தேடுதல் வேட்டை மாற்றப்பட்டுள்ளது.

620-100 Final