குறி சொல்லி அசத்தும் நரிப்பெண்ணை பார்க்க அலைமோதும் பார்வையார்கள்!!

581

பாகிஸ்தானில் உயிரியில் பூங்கா ஒன்றில் நரிப்பெண் ஒருவர் எதிர்காலம் பற்றி குறி சொல்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள உயிரியில் பூங்காவில் உடலின் கீழ்ப்பகுதி நரியின் உருவத்திலும் மேல் பகுதி பெண் உருவிலும் மும்தாஸ் என்ற புனைப்பெயர் கொண்ட நரிப்பெண் இருக்கிறார்.

பாதி நரி வேடமிடும் இவர் தினமும் சுமார் 12 மணிநேரம் அங்கு குவியும் பார்வையாளர்களுக்கு தங்களது வருங்காலம் தொடர்பாக குறி சொல்கிறார்.

இவர் நகைச்சுவையுடன் பேசுவதால் எப்போதும் இவரை பார்க்க பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இவரிடம் பள்ளிக் குழந்தைகள் தங்கள் தேர்வு முடிவுகளையும், திருமணமாகாத பெண்களின் பெற்றோர்கள் தங்களது மகளின் மண வாழ்க்கை குறித்தும் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.

மேலும் முதியோர்கள் தங்களது கடந்த காலத்தை பற்றி கேட்டாலும் ஆதி முதல் அந்தம் வரை மும்தாஸ் மிகச்சரியாக கூறுகின்றார்.
இதனால் கராச்சி உயிரியல் பூங்காவில் உள்ள மான், யானைகள் மற்றும் பிற விலங்குகளை காட்டிலும் பார்வையாளர்களை இவர் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

F1 F2 F3

 

620-100 Final