
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் 20 வயதாகும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சோயிப் அக்தருக்கு தற்போது 39 வயது ஆகின்றது.
கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் ஹாரிப்பூரைச் சேர்ந்த 20 வயதுடைய ரூபாப் என்ற பெண்ணை, அக்தர் கரம் பிடித்ததாக துனியா தொலைக்காட்சி செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த திருமணம் எளிமையான முறையில், உறவினர் முன்னிலையில் ரகசியமாக நடைபெற்றதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.






