அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இலங்கை வம்சாவளிப் பெண்!!

908

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலிய நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய நிதி நிறுவனமான மெக்கரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது ஆண்டு சம்பளம் 30 மில்லியன் டொலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய நிதி மதிப்பாய்வின் அண்மைய ஆய்வு அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஷெமாரா விக்ரமநாயக்க ஒருவரே பெண் என்பது சிறப்பு. இவரைத் தவிர மேலுமொரு பெண் மட்டும் முதல் 50 இடங்களில் உள்ளார்.