மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

908

கண்டியில்..

கண்டியில் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்தி பெண் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கண்டி ஏ 26 மஹியங்கனை வீதியில் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பெண்ணொருவரை போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெல்தெனிய வாகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. தெல்தெனிய மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து அவருக்கான செவிப்புலன் தொடர்பில் அறிக்கையையும் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.