பண்டாரவன்னியன் தினத்தை மாற்றியமைக்க வேண்டுகோள்!!

567

Maaveeran-Pandaara-Vanniyan

வன்னியை ஆண்ட இறுதி மன்னனான பண்டாரவன்னியனின் தினத்தை ஆண்டு தோறும் ஒகஸ்ட் மாதத்தில் அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை வவுனியா நகர வரியிறுப்பாளர்கள் சங்கம், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், பண்டாரவன்னியன் நற்பணி மன்றம், வன்னி மக்கள் முன்னேற்றக்கழகம், வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், சிக்கன கடன் கூட்டுறவுச்சங்கம் ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து விடுத்துள்ளனர். இக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வன்னி பிரதேசத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் நினைவுதினம் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இதுவரை காலமும் நகரசபையினால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

இதனால் இத்தினத்தை விடுத்து வெள்ளையனிடமிருந்து முல்லைத்தீவு கோட்டையை தகர்த்த நாளான ஓகஸ்ட் 25ஆம் திகதி அனுஷ்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை நகரசபை கவனத்தில் எடுத்துள்ளதுடன் எத்தினத்தில் பண்டாரவன்னியன் தினத்தை அனுஷ்டிப்பது என்பது தொடர்பாக எதிர்வரும் தினங்களில் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.