வவுனியாவில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் கொள்ளையர்கள் கைவரிசை : தங்கச் சங்கிலி, வளையல், கைப்பேசி, 4000 பணம் கொள்ளை!!

653

Vav

A9 வீதியில் சாந்தசோலை சந்திப் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் கொள்ளையர்கள் இருவர் தங்கள் கைவரிசையை  காட்டியுள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது ..

இன்று காலை 11.30 மணியளவில் A9 வீதி – சாந்தசோலை சந்திப் பகுதியில் இளம்பெண் ஒருவர் பேருந்திற்காக தனிமையில் காத்திருக்கும் சந்தர்பத்தில் அங்கு வந்த கொள்ளையர்களில் ஒருவன் பெண்ணை மடக்கிப் படிக்க மற்றவன் அப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல், கைப்பேசி மற்றும் 4000 பணத்தினை கொள்ளையடித்துவிட்டு பெண்ணை வீதி அருகில் தள்ளி விழுத்திவிட்டு, அருகில் இருந்த வயல்வெளியினூடாக தப்பிச் சென்றுள்ளனர்.

சற்று நேரத்தில் அங்கு வந்த இளைஞர்கள் இருவரிடம் அப் பெண் நடந்த சம்பவத்தை கூற அவ் இளைஞர்கள் வயல் வெளியில் தேடித் பார்த்தபோதும் கால்தடங்கள் மட்டுமே காணப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அருகில் உள்ள பொலிசாரிடமும், இராணுவத்தினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-ரகுவரன்-