நெதர்லாந்திடம் வீழ்ந்த மெக்சிகோ : அம்பலமான உண்மை!!

505

Netharland

மெக்சிகோ அணிக்கெதிரான ஆட்டத்தில் வேண்டுமென்றே தான் கீழே விழுந்ததாக நெதர்லாந்து அணியின் வீரர் அர்ஜென் ராபென் தெரிவித்துள்ளார்.

ரவுண்ட்-16 சுற்றில் நெதர்லாந்து- மெக்சிகோ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதி முடியும் தருணத்தில் ராபென் மின்னல் வேகத்தில் முன்னேறினார்.

இவரது காலை குறி வைத்து மெக்சிகோ தற்காப்பு பகுதி வீரர்கள் மார்க்கஸ், மொரினோ முரட்டுத்தனமாக மடக்கினர். கீழே விழுந்த ராபென் ‘பெனால்டி’ கேட்டார். நடுவர் மறுத்ததால் நெதர்லாந்தின் வாய்ப்பு நழுவியது.

இரண்டாவது பாதியில் நெதர்லாந்தின் ராபெனை, மெக்சிகோவின் மார்க்கஸ் வீணாக மடக்கினார். இதையடுத்து ‘பெனால்டி’ வழங்கப்பட்டது. இதில், ஹன்டலார்(90+4) சுலபமாக கோல் அடிக்க, நெதர்லாந்து அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நெதர்லாந்து தொலைக்காட்சி சனலுக்கு அளித்த பேட்டியில் அர்ஜென் ராபென் கூறுகையில், கீழே விழுந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் நிச்சயமாக அவ்வாறு செய்திருக்கக் கூடாது.

அனைவருமே சில நேரங்களில் இதுபோன்று முட்டாள்தனமாக நடந்து கொள்வது உண்டு. நாம் தடுக்கப்பட்டு விடுவோம் என்ற எண்ணத்தில் அப்போது செயல்பட்டேன்.

ஆனால் மெக்ஸிகோ வீரர் தனது காலை உடனேயே எடுத்து விட்டார். எனினும் எங்கள் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு அளிக்கப்பட்டது சரியான முடிவுதான் என்று ராபென் கூறியுள்ளார்.