இலங்கை அணியுடனான தொடர் கடும் சவாலாக அமையும் : ஹசிம் அம்லா!!

458

Amla

இலங்கை அணியுடன் மோதப் போகும் தொடரானது சவால் நிறைந்ததாக அமையும் என்று தென்னாபிரிக்க அணியின் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்ட அம்லா கூறியுள்ளார்.

தென்னாபிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த முதல் ஒருநாள் போட்டி வரும் 6ம் திகதி நடைபெறுகிறது.

தென்னாபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய அணித்தலைவராக அம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் கவனத்தை செலுத்த போவதாக தெரிவித்த அம்லா இது பற்றி கூறுகையில், கடந்த காலங்களில் தென்னாபிரிக்க அணி இலங்கையில் சிறப்பாக விளையாடவில்லை. எங்களுக்கு இலங்கை தொடர் சவால் வாய்ந்ததாகும்.

டெஸ்ட் போட்டிக்கு முன்பான ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடுவதே என்னுடைய எண்ணம். அதற்காகவே முழுக்கவனம் செலுத்தி வருகிறேன்.

தரவரிசையில் தற்போது நாங்கள் 2வது இடத்தில் உள்ளோம். இத்தொடரில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிப்போம். தற்போது இலங்கை தொடரில் சாதிக்கும் வகையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன்.

அணித்தலைவர் பொறுப்பை ஏற்றவுடன் நான் அதிகமாக சிந்தித்தபோதும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இத்தொடர் தொடங்கிய உடன் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.