
இந்தியாவைச் சேர்ந்த ஐ.ஐ.டி., மாணவர்கள் இருவர் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு தற்போது இந்தியாவில் டீக்கடை நடத்திவருகின்றனர்.
மும்பை ஐ.ஐ.டி. மானவர் நிதின் சலூஜா மற்றும் டில்லி ஐ.ஐ.டி., மாணவர் ராகவ் வர்மா இருவரும், அமெரிக்காவில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர்.
அமெரிக்காவில் சில காலம் பணியாற்றிய அவர்கள் இருவருக்கும் டீ கபே ஆரம்பிக்கும் எண்ணம் வந்தாதால், தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளனர்.
பின்னர், அரியானா மாநிலம், குர்கான் மற்றும் நொய்டாவில், ‘சாயோஜ்’ என்னும், ‘டீ கபே’யை, தனியார் நிறுவனத்தின் நிதியுதவியுடன், தங்களுடைய சேமிப்பையும் சேர்த்து துவக்கியுள்ளனர்.
இந்நிலையில், ஐந்து கிளைகளை துவங்கிய அவர்கள், இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் ஐந்து கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் தயாரித்து தரும் 25க்கும் மேற்பட்ட சுவைகளை உடைய டீ வாடிக்கையாளர்களிடம் பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





