வடக்கிற்கான ரயில் சேவைகள் ரத்து!!

716

Train

வடக்கிற்கான இன்றைய (01.07) இரவுநேர ரயில் சேவைகள் மூன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொல்கஹவெல, பொதுஹரவு – ஹிராம்பே பிரதேசத்தில் இன்று முற்பகல் பயணித்த ரயில் தடம்புரண்டதன் காரணமாக இந்த சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி இன்று (01) இரவு 7.15 மணிக்கு கொழும்பு, கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரை பயணிக்க தீர்மானிக்கப்பட்ட ரயில், இரவு 8.15 மணிக்கு கொழும்பு – கோட்டையிலிருந்து பளை வரை பயணிக்க தயாராகவிருந்த ரயில் மற்றும் இரவு 9 மணிக்கு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு பயணிக்க தயாராகவிருந்த ரயில் சேவைகளே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு மற்றும் பளை வரை செல்லும் ரயில் பொல்கஹவெல வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.