
சிறுவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் பௌத்த பிக்கு ஒருவருக்கு 70 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று வழங்கியது.
இவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நான்கு சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு 402,000 ரூபாவை அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் பிக்குவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பிக்குவால் 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர்கள் மீது குற்றங்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை குற்றம் சுமத்தப்பட்ட பிக்கு தாம் வறுமை காரணமாகவே தமது தாயால் பிக்குவாக மாற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதன்போதே தாம் பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள்வற்கு பழக்கப்படுத்தப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.





