யாரும் எனக்கு ஆலோசனை சொல்லத் தேவையில்லை : விராட் கோஹ்லி!!

469

Kholi

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி அடுத்த போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து போட்டி தொடர் பற்றி கோஹ்லி கூறுகையில், தொடக்கத்தில் ஒருவரது கிரிக்கெட் வாழ்வில் விமர்சகர்களுக்கு நிரூபிக்க வேண்டியத் தேவை இருக்கிறது.

ஆனால் இப்போது அதுபோன்றத் தேவை இருப்பதாக நான் கருதவில்லை. நான் ஏதோ சாதித்து விட்டேன் என்பதாக இதனைக் கூறவில்லை.

இங்கிலாந்தில் அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று யாரும் அறிவுரை வழங்காமலே எனக்கே தெரியும். இது பெரிய போட்டி அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று யாரும் எனக்கு அறிவுரை வழங்க வேண்டியது இல்லை.

இங்கிலாந்தில் மட்டும் அல்ல பிற நாடுகளிலும் அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். ஏன் என்றால் நான் சிறந்த வீரராக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.