18 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

601

Hang

ஹட்டன் – டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப் படவில்லையெனவும், சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.