17 வயது சிறுமியை ஐவருடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த காதலன்!!

576

Abuse

காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் காதலன் உள்ளிட்ட அறுவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி உடப்பு பகுதியில் முடி வெட்டும் நிலையம் ஒன்றில் பணி புரியும் நபரைக் காதலித்துள்ளார்.

இந்தநிலையில் சிறுமி சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தனது காதலனைக்கான அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது தனது காதலன் உள்ளிட்ட அறுவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.