
கண்டியில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி வெரல்லாகம என்னும் இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு இன்று ஒரே சூலில் ஐந்து குழந்தைகளை பிரசவித்துள்ளார்.பத்து வருடங்களாக இந்தப் பெண் குழந்தை பாக்கியமின்றி அவதியுற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேராதனை போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவம் இடம்பெற்றுள்ளது. ஐந்து குழந்தைகளில் ஒன்று பெண் குழந்தை எனவும் ஏனையவை ஆண் குழந்தைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை பிரசவித்த தாயும் பிள்ளைகளும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





