
ரவுண்ட்-16 சுற்றின் கடைசி போட்டியில் அமெரிக்க அணியின் கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் 16 முறை பந்தை கோல் விழ விடாமல் தடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் அமெரிக்க அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. இதனால் அமெரிக்க அணி உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.
அதே சமயம் அமெரிக்க அணியின் கோல் கீப்பர் புதிய சாதனையை படைத்தார். பெல்ஜியம் அணியுடனான போட்டியில் அமெரிக்க கோல்கம்பத்தை நோக்கி 38 ஷொட்டுகள் அடிக்கப்பட்டன.
அதில் 2 கோல்கள் ஆகின. 16 முறை பந்தை, கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் அபாரமாக தடுத்து நிறுத்தினார்.
இதற்கு முன்பு 1978ம் ஆண்டு, பெரு நாட்டு கால்பந்தாட்ட அணியின் கோல் கீப்பர் ரமோன் குயிரோகா 13 முறை பந்தை தடுத்து சாதனை நிகழ்த்தியிருந்தார்.
16 முறை கோல் விழுவதில் இருந்த ஹோவர்ட் தடுத்ததால் ரமோனின் 36 ஆண்டுகால சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது.





