இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டமை குறித்து ஐ.நா கவலை!!

563

Boat

அவுஸ்திரேலியா நோக்கிக் சென்ற தமிழ் புகழிடக் கோரிக்கையாளர்கள் கடலில் இடைமறிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டதாக வெளியான செய்தி குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

இரண்டு படகுகளில் சென்ற இலங்கை தமிழ் புகழிடக் கோரிக்கையாளர்கள் கிருஸ்மஸ்தீவுக்கு அருகில் இடைமறிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமையம், படகுகளை இடைமறிக்கும் போது சர்வதேச நியமங்கள் மற்றும் கடமைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளரின் கோரிக்கையும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை ஒரு நாட்டில் இருந்து பயம் காரணமாக வெளியேறும் ஒருவர் மீண்டும் அந்த நாட்டுக்கு பலவந்தமாக அனுப்பப்படுகின்றமை சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் குறிப்பிட்டுள்ளது.