ஆகாயத் தாமரை செடிகளிலிருந்து டீசல் தயாரிகவுள்ள இலங்கை!!

1544

Thamarai

இலங்கையில் நீர் நிலைகளில் வளரும் ஆகாயத் தாமரை செடிகள் மூலம் டீசல் தயாரிக்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த தயாராக இருப்பதாக, வர்த்தகம் மற்றும் கைத்தொழிற்துறை பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறை நாவுல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருளுக்காக நாட்டில் செலவிடப்படும் பணத்தை குறைப்பதற்காக ஆகாயத் தாமரை செடியில் இருந்து டீசல் தயாரிக்கும் வெற்றிகரமான முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த தயாராக இருகின்றேன்.

75 தொன் ஆகாயத் தாமரை செடியில் இருந்து 24 ஆயிரம் லீற்றர் டீசல் தயாரிக்க முடியும். தென்னாபிரிக்காவின் அபிவிருத்தித் திட்டமாக ஜனாதிபதியுடன் பேசி இலங்கையில் அதனை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களில் காணப்படும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான நீர் செடிகள் மூலம் எரிபொருள் தயாரிக்க முடிந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என தான் நம்புவதாகவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.