
தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியில் மீண்டும் தரங்க மற்றும் விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரானது வரும் 6ம் திகதி தொடங்கவுள்ளது.
இதற்காக 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் உபுல் தரங்க, கிதுருவன் விதானகே ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் இங்கிலாந்து தொடரின்போது காயம் அடைந்த சுரங்க லக்மல் அணிக்கு திரும்பியுள்ளார். இலங்கை அணி வீரர்கள் விவரம் வருமாறு..
மத்யூஸ் (தலைவர்), திரிமன்ன (துணைத் தலைவர்), டில்ஷான், குஷால் பெரேரா, குமார் சங்கக்கார, ஜெயவர்தன, விதானகே, அசன் பிரியன்ஞன், உபுல் தரங்க, சேனநாயக, ஹெரத், அஜந்த மெண்டீஸ், திஷாரா பெரேரா, குலசேகரா, மலிங்க, சுரங்க லக்மல்





