மெரிக்காவை சேர்ந்த பிரபல கடல் ஆராய்ச்சியாளரின் பேரன் கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், வசித்த பிரபல கடல் ஆராய்ச்சியாளரான ஜேக்கஸ் கவுஸ்ட்டேவின் பேரன் பேபியன் கவுஸ்ட்டே (46).
இவர் 63 அடி ஆழத்தில் உள்ள ஆய்வகத்தில், தனது குழுவினருடன் கடந்த யூன் 1ம் திகதி சாகச ஆய்வுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.
அவருக்கு விஞ்ஞானிகள் தினமும் சீதோஷ்ண நிலை குறித்த விவரங்களையும், கடல் அமிலமாதல் குறித்த தகவலையும் தந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடலுக்கடியில் 31 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு நடத்திய இவர் தனது தாத்தாவின் 30 நாட்கள் சாதனை முறியிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது கடல் வாழ்க்கையை முடித்து தரைக்கு திரும்பிய பேபியன் கூறுகையில், கடந்த 1960ம் ஆண்டு கடலுக்கு கீழே 30 நாட்கள் வசித்து சாதனை படைத்த எனது தாத்தாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் என்றும் எனது சாகசங்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.






