இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது உங்களை யாராவது உளவு பார்க்கிறார்களா : கண்டுபிடிக்க புதிய சாதனம் அறிமுகம்!!

502

ICLOCK

இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது யாராவது உளவு பார்த்தால், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் உதவும் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணைய உலாவலின்போது ஒரு நாட்டின் அரசாங்கம் உட்பட தனிப்பட்ட நபர்களின் கண்காணிப்பு இருக்கும்போது அதிலிருந்து தப்புவதற்கு உதவும் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

iCloak Stik எனும் இந்த USB சாதனம் விசேடமாக இணைய உலாவலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரையறுக்கப்பட்ட இணைய பாவனையை பெற்றுக்கொள்வதுடன் ஏனையவர்கள் வேவு பார்ப்பதையும் நிறுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இதனை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் அப்பிள் Mac இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளில் பயன்படுத்த முடியும்.