
அடுத்த பிறவியில் எனது குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறேன் என்று நடிகை ஷகிலா கூறியுள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படங்களுடன் ஒரு காலத்தில், போட்டிபோட பிரபல நடிகர்களே தயங்கினர். தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வரும் இவர் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில், மீண்டும் பிறக்க முடிந்தால் நான் மறுபடியும் ஷகீலாவாகவே பிறக்க விரும்புகிறேன். அதுவும் மீண்டும் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன் கூறியுள்ளார்.
ஏன் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேள்விக்கு, நான் குடும்பத்தாரால் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் என்றும் அவர்கள் என்னை படுத்தியபாட்டுக்கு அவர்களை பழிவாங்க போகிறேன் எனவும் கூறியுள்ளார்.





