கைத்தொலைபேசி திருடியதை காட்டிக் கொடுத்த சீசீரிவி கமெரா : இன் நபரை தெரிந்தால் தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள்!!

476

ஹற்றன் பிரதான நகரில் ஒரு உணவகத்தில் உணவு உட்கொள்ள வந்த ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை தனது மறதியால் அங்கு கைவிட்டுச் சென்றிருந்தார். அந்த தொலைபேசியை அதே உணவகத்திற்கு உணவு உட்கொள்ள வந்த இன்னொரு நபர் எடுத்து தனது பைக்குள் தெரியாமல் வைப்பதை அங்கிருந்த சீசீடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் 03.07.2014 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தெரியவருவதாவது,

உணவகம் ஒன்றுக்கு உணவு உட்கொள்ள வந்த நபர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை மறதியால் அவ்விடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

பிறகு அவர் அவ்விடத்திற்கு வந்து தனது கையடக்க தொலைபேசியை நான் மறதியால் வைத்துவிட்டு சென்றுள்ளேன். அதனை யாராவது பார்த்தீர்களா என்று தொலைபேசியை திருடிய நபரிடமே கேட்டபோது அவர் நான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

எனினும் குறித்த நபரே தொலைபேசியை திருடிய காட்சிகள் குறித்த உணவகத்தில் இருந்த சீசீரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

மேற்படி சந்தேக நபரை யாருக்காவது தெரியுமானால் உடனடியாக ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

11 12 13 14 15 16