வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் தற்கொலை :  அதிர்ச்சித் தகவல்கள்!!( படங்கள்)

593

4

வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்து கல்வி பயின்று வருபவர் என்றும் நேற்று முன்தினம் இரவே (03.07.14) இந்தச் சம்பவம் இடம்பெற்று உள்ளதாகவும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் ஆண்டு மாணவரான 24 வயதுடைய சிவலிங்கம் யசோதரன் என்பவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக தற்கொலைக்கு முயன்று கைகளினை பிளேடினால் அறுத்துக்கொண்ட அவர் அது பலித்திராத நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன் முகப் புத்தகத்தில் இறுதியாக இரு கவிதைகளை இவர் பதிவேற்றம் செய்துள்ளார். இக் கவிதைகள் இவருக்கு வாழ்வில் ஏற்பட்ட விரக்தியை காட்டுகின்றது.

இவர் தான் தங்கியிருந்த வீட்டின் முற்றத்தில் நின்ற மாமரத்தில் நைலோன் கயிற்றின் உதவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் சவர அலகினால் தனது இரு கைகளையும் அறுத்துக் கொண்டதன் காரணமாக சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இரத்தம் அதிகமாக காணப்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.

தற்கொலைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

638Suc