வவுனியாவில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது!!

2024

Kanja

கஞ்சா செடி பயிரிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்படுவதாகப் வவுனியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்தனர்.

சந்தேகநபர் தனது வீட்டுத் தோட்டத்தில் 25 அங்குலம் உயரமுள்ள 150 கஞ்சா செடிகளை வளர்த்திருந்தார் என்று தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பான மேலுதிக விசாரணைகளை வவுனியார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.