வவுனியாவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்!!

1530

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று 31.01.2024 காலை தப்பியோடியுள்ளமை தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை குற்றச்சாட்டில் கடந்த 26.01.2024 அன்று நெளுக்குளம் பொலிஸாரினானால் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய இளைஞன் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 29.01.2024 அன்று சிறைச்சாலையில் சந்தேகநபரான 28வயதுடைய இளைஞருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே 31.01.2024 அன்று காலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.