
உலக கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் அல்ஜீரிய அணி, 2வது சுற்றில் ஜெர்மனியுடன் தோற்று வெளியேறியது.
முதல் முறையாக நொக்-அவுட் சுற்றை எட்டிய திருப்தியுடன் தாயகம் திரும்பிய அந்த அணிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்த போட்டியின் மூலம் அல்ஜீரியா அணிக்கு கிடைத்த பரிசுத்தொகை 54 கோடியை, போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்திருப்பதாக அந்த அணி வீரர் இஸ்லாம் சிலிமானி தெரிவித்துள்ளார்.





