ரம்பா பற்றிய வதந்தியால் கொதித்தெழுந்த குஷ்பு!!

510

Ramba

கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக ரம்பா குறித்து வெளியான வதந்திகளுக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திர பத்மநாதனுக்கும் 2010ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சம்பா என்ற பெண் குழந்தை உள்ளது.

ரம்பா தற்போது கனடாவில் கணவருடன் வசித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையும் அவர் நிறுத்தி விட்டார்.

கணவருடன் ரம்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் குஷ்பு சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட கனடா சென்றுள்ளார். அப்போது, ரம்பா வீட்டிற்கு சென்ற அவர், ரம்பா மற்றும் அவரது குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த படத்தை குஷ்பு தனது டுவிட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, கனடாவில் ரம்பா வீட்டுக்கு சென்றேன். அங்கு ரம்பாவும், அவரது கணவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கருத்து வேறுபாடு என்றும் பிரியப்போகிறார்கள் என செய்தி பரப்புவது ரொம்ப தவறு இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.