திமுகவில் இருந்து விலகிய கையோடு கனடா சென்ற குஷ்பு கலக்கலான குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.
1990ம் ஆண்டுகளில் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் பேரினால் உச்சரிக்கப்பட்ட பெயர் குஷ்பு. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத போது சின்னத்திரைக்கு வந்து கலக்கினார்.
சினிமா சின்னத்திரையில் ஆடும் ஆட்டத்தை விட அரசியல் களத்தில் கடந்த நான்கு ஆண்டுகாலமாக குஷ்புவின் பேச்சுதான்.
பிரசார களத்தில் குஷ்புவைக் காண தனி கூட்டமே கூடியது என்று சொல்லலாம்.
இந்நிலையில் அரசியலை விட்டு விலகிய கையோடு கனடா போன குஷ்பு அங்கு போட்ட ஆட்டம் தான் ஹைலைட். அதுவும் வயலட் நிற புடவையில் லைட்டாய் குஷ்பு குத்தாட்டம் போட, ரசிகர்கள் அசந்து போயினர்.






