
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறார். ஆனால் 30 வயதும் கடந்து இவர் இன்னும் திருமணம் செய்யாமலேயே இருந்து வருகிறார்.
தன் காதலன் யார் என்பதையும், யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார். ஆனால் தற்போது பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட ராணாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இதிலிருந்து ராணா தான் இவர் காதலர் என்பது உறுதியாகியுள்ளது.
இதை தொடர்ந்து திரிஷாவும் ராணாவும் அமெரிக்காவில் சில நாட்கள் ஜாலியாக விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளனர்.





