
தமிழ் திரையுலகின் நம்பர் 1 காமெடியன் இடத்தை கிட்டதட்ட பிடித்துவிட்டார் பரோட்டா சூரி. இதற்கு முக்கிய காரணம் சந்தானம் ஹீரோ வேஷம் கட்டியது தான்.
தற்போது சூரி காட்டில் அடைமழை தான், சந்தானத்தை வைத்து இயக்கிய பல இயக்குனர்கள் சூரி பக்கம் வந்து கொண்டே இருக்கின்றனர். இதில் சமீபத்தில் இணைந்திருப்பது இயக்குனர் சுராஜ்.
இவர் ஜெயம் ரவி-அஞ்சலியை வைத்து இயக்கும் படத்தில் , சின்னப்பட்டி சின்னச்சாமியாக சூரி, அஞ்சலியை காதலிக்க சுற்றி வரும் ஜெயம்ரவிக்கு போட்டியாக இவரும் காதல் வலை விரிப்பாராம். இது ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என இயக்குனர் தெரிவித்துள்ளனர்.





