
நீங்கும் விரும்பும் சின்னத்திரை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் தோன்றும் படம் புதியதோர் உலகம் செய்வோம். நாட்டில் புரையோடிக்கிடக்கும் சில விஷயங்கள் தங்கள் வீட்டிலே நடப்பது கண்டு கொந்தளிக்கும் குழந்தைகள், அவற்றை மாற்ற முயற்சிப்பதுதான் கதையின் கரு.
சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித், அனு, யாழினி, பிரவின், அல்கேட்ஸ் அழகேசன், சந்தோஷ் பாலாஜி, நாராயணன், சூர்யேஸ்வர், சந்தியா இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி , நடித்திருக்கிறார்.
விரைவில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தை கே.எஸ்.நாகராஜன்ராஜா வழங்க, பி.நித்தியானந்தம் டி.எப்.டி. இயக்குகிறார். பிரவின் சைவி இசையமைக்கிறார். பாலாஜி ரங்கா – விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, உதயசங்கர் டி.எப்.டி. படத்தொகுப்பு செய்கிறார்.
ஸ்ரீதேஜு பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ஜெயகுமார், திருமதி கே.என். சூரியகலா தயாரிக்கின்றனர். புதியதோர் உலகம் செய்வோம் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.





