ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு கிடைத்த அதிசய காதலன்!!

537

Twin

கொல்கத்தாவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு காதலன் ஒருவர் கிடைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

கங்கா மற்றும் ஜமனா என்ற ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகள் சர்க்கஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன் ஒலி பொறியாளராக பணிபுரிய வந்த பள்ளி ஆசிரியரான ஜசிமுதீன் அகமது, அவர்களை கண்டவுடன் காதலில் விழுந்துள்ளார்.

அவர்கள் இருவரும், இவர் தான் தங்களை உண்மையாக காதலிப்பதாக உணர்ந்துள்ளனர். இதுபற்றி இரட்டையர்களில் ஒருவரான ஜமுனா கூறுகையில், கடந்த காலங்களில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டோம்.

ஆனால் இனிமேலும் நாங்கள் அவதிப்பட விரும்பவில்லை என்றும், வரும் காலம் முழுவதையும் நாங்கள் அவருடன் கழிப்போம் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய காதல் குறித்து அகமது கூறுகையில், ஒவ்வொரு முறையும் அவர்கள் வேதனைப்படுவதை பார்த்தபோது, நான் வேதனை அடைந்தேன்.

மேலும் தற்போது ஒவ்வொரு இரவையும் நான் அவர்களுடனேயே கழித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.