வவுனியா ஊடான வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

1126

Train

கொழும்பு கோட்டையிலிருந்து பளை வரை சேவையில் ஈடுபடும் ரயில் தடம் புரண்டுள்ளது. அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் இந்த ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகள் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.